×

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி முகாம்

காஞ்சிபுரம், ஜூன் 21: காஞ்சிபுரம் மாவட்டம், ஊரக வளர்ச்சி  முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் (ஊரகம்) கீழ் ஊராட்சியில் முழுசுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்தது. கலெக்டர் பொன்னையா முகாமை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், 2014 ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தேசிய இயக்கமாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பொது மக்களை ஊக்குவிக்கும் பொருட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமத்திலும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டப்பட்டு, மக்களிடையே மனமாற்றம் செய்து, திறந்தவெளி மலம் கழித்தலற்ற ஊராட்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக, மாநில அரசு, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களுக்கான தூய்மை பாரத கோடைக்கால பயிற்சி முகாமை நடத்தி, கல்லூரி மாணவர்களை 60 மணிநேரம் சுகாதார செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு, குழுவாக கிராம புறங்களுக்கு சென்று மக்களுடன் இணைந்து அவர்களுக்கு சுகாதாரம் சம்பந்தமான தெரு முனை நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மேற்கொள்ளுதல், வீடுகளுக்குச் சென்று தனிநபர் இல்லக் கழிப்பறை அவசியம் குறித்து விளக்கி மனமாற்றத்தை ஏற்படுத்துதல் உள்பட கோடைக்கால பயிற்சியின் முக்கியத்துவத்துவம், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கூறினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் சத்தியசங்கரி, தூய்மை பாரத இயக்க திட்ட  ஆலோசகர் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : college students ,Summer Training Camp ,Bharat ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்