×

பட்டா வழங்கி 40 ஆண்டாகியும் அடங்கல் கணக்கு இல்லாமல் 133 குடும்பத்தினர் கடும் அவதி

திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஜமாபந்தி அலுவலர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலக செயலாளர் அம்பேத்ஆனந்தன் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு வசிக்கும் 133 குடும்பத்தினருக்கு கடந்த 1978ம் ஆண்டு 5 ஏக்கர் நிலத்தை தனிநபரிடம் இருந்து கைப்பற்றி தலா 3 சென்ட் வீதம் ஆதிதிராவிட மக்களுக்கு தனி வட்டாட்சியரால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

மேலும், அரசு சார்பில் தொகுப்பு வீடுகளும் கட்டி தந்ததோடு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு, ஆதார் உட்பட அனைத்தும் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 40 ஆண்டுகளாகியும் இப்பகுதியை கிராம அடங்கல் கணக்கில் அதிகாரிகள் இணைக்கவில்லை. இதனால் இருப்பிட சான்றுகோரி விஏஓவிடம் சென்றால், ‘‘நீங்கள் வசிக்கும் இடம் அரசு புறம்போக்கு’’ என கணக்கில் உள்ளதாக கூறி சான்றுகள் வழங்க மறுக்கிறார். எனவே அனைத்து பட்டாதாரர்களையும் தனித்தனியாக அரசு அடங்கல் கணக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : families ,
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...