அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதம்

நாகர்கோவில், ஜூன் 19: ரயில் எண் 16724 கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ெகால்லத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவது நேற்று 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக மாலை 5.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. இதனால் ரயில் மிகுந்த தாமதத்துடன் நாகர்கோவில் ஜங்ஷன் வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்ந்தனர். இணைப்பு ரயில் வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு