நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர்கள் தர்ணா

நாகர்கோவில், ஜூன் 19:  மாத இறுதி நாளில் ஓய்வூதியம் வழங்க முடியாதபடி செயற்கையாக உருவாக்கியுள்ள காலதாமதத்தை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் முதல் அதை சீர் செய்ய வேண்டும். தபால்காரர்களின் உயர்த்தப்பட்ட சம்பள விகிதத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை 1.1.1996 முதல் மறு நிர்ணயம் செய்து வழங்கிட வேண்டும். சாமியான்பிள்ளை மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு நிரந்தர ஓய்வூதிய ஆணை கிடைத்திட ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று காலை அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் அமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. ேபாராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கையன் தலைமை வகித்தார். முன்னாள் கோட்ட செயலாளர் தங்கப்பன் வரவேற்றார். ஆலோசகர் சுப்பிரமணியன் தர்ணாவை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராஜநாயகம் தர்ணா போராட்டம் குறித்து பேசினார். தர்ணா போராட்டத்தில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் ஜாண்சன், காளிபிரசாத், ஐவின், குழந்தைசாமி, சுந்தர்ராஜ், ஐயப்பன்பிள்ளை, இந்திரா உள்பட பலர் பேசினர்.

Tags : Nagercoil ,
× RELATED கருணைத் தொகை ரூ.4,000 வழங்க கோரி மின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்