×

முதியோர் முன்னேற்ற கூட்டமைப்பு மனு கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விருதுநகர், ஜூன் 19: உதவித்தொகை வழங்கக்கோரி, முதியோர் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில், நூற்றுக்கணக்கான முதியோர் திரண்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:விருதுநகர் மாவட்டத்தில் முதியோர் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில், முதியோர் சுய உதவிக்குழுக்கள் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் உறுப்பினர்கள் வாழ்வாதாரத்திற்கு சுயதொழில்களை செய்து வருமானம் ஈட்டுகின்றனர். சுயதொழில் தொடங்க வங்கிகளை அணுகினால், முதியோர் குழுக்களுக்கு கடன் வழங்க மறுக்கின்றன. மாநில ஊரக வாழ்வாதார திட்டம், முதியோர்களை சிறப்பு பிரிவின் கீழ் தகுதியுடைய பயனாளிகளாக அங்கீகரித்துள்ளது. முதியோர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தில் இணைத்து வங்கி கடன் பெற்றுத்தர வேண்டும். மேலும், மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான முதியோருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உதவி தொகை கோரி விண்ணப்பித்த முதியோர்களுக்கு  உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Progressive Federation ,Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...