×

வரத்து அதிகரிப்பால் வத்தல் விலை மூட்டைக்கு ரூ.ஆயிரம் குறைவு

விருதுநகர், ஜூன் 19: குடோன்கள் மற்றும் விவசாயிகளிடம் இருப்பில் இருந்த வத்தல் விற்பனைக்கு வந்ததையடுத்து வத்தல் மூட்டைக்கு ரூ.ஆயிரம் விலை குறைந்துள்ளது. குடோன்கள் மற்றும் விவசாயிகள் வைத்திருந்த இருப்பு வத்தல் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் நாடு மற்றும் முண்டு வத்தல் மூட்டைக்கு ரூ.ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூ.7,500 முதல் 8,800 வரை விற்ற நாடு வத்தல், இந்த வாரம் ரூ.7,000 முதல் 8,000 வரையும், ரூ.7,500 முதல் 10,000 வரை விற்ற முண்டு வத்தல் ரூ.7,000 முதல் 9,000 வரை விற்பனையானது.மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து புது எள் வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருப்பில் இருந்த எள் விற்பனைக்கு வெளி வருவதால், நல்லெண்ணெய் டின் ரூ.165, எள் பிண்ணாக்கு மூட்டைக்கு ரூ.200 விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.4,620க்கு விற்ற நல்லெண்ணெய் டின் (15 கிலோ) ரூ.4,455க்கும், ரூ.1,800 விற்ற எள் பிண்ணாக்கு (50 கிலோ) ரூ1,600க்கும் விற்பனையானது.

மேலும், விலைவாசியை குறைக்க பருப்பு இறக்குமதிக்குமான தடையை மத்திய அரசு நீக்கி, இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து துவரம்பருப்பு மூட்டைக்கு ரூ.500 விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.6,500க்கு விற்ற லைன் துவரை இந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கும், ரூ.8,800க்கு விற்ற லைன் துவரம்பருப்பு ரூ.8,300க்கும், ரூ.8,000க்கு விற்ற உடைசல் துவரம்பருப்பு ரூ.7,500க்கும் விற்பனையானது. வரும் வாரங்களில் அனைத்து பருப்பு வகைகளின் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்:
உளுந்து (100 கிலோ) லயன் (பாலீஸ்) - ரூ.6,500, உளுந்து பருவட்டு - ரூ.6,800,  உளுந்தம் பருப்பு லைன் - ரூ.8,500, உளுந்தம் பருப்பு (தொளி) - ரூ.7,100, பாசிப்பயறு லைன் (100 கிலோ) - ரூ.6,800, லைன் பாசிப்பருப்பு - ரூ.9,000,
நாடு பாசிப்பருப்பு - ரூ.8,500, அவியல் பாசிப்பயறு - ரூ.8,000, ஆஸ்திரேலியா பட்டாணி (100 கிலோ) - ரூ.7,600, கனடா பட்டாணி - ரூ.5,600, கனடா பட்டாணி (வெள்ளை) - ரூ.5,000, ரங்கூன் மொச்சை - ரூ.6,000, தட்டைப்பயறு மூட்டை - ரூ.5,400, வெள்ளை கொண்டைக்கடலை - ரூ.6,500, கொண்டைக்கடலை சிவப்பு - ரூ.5,200, கடலைப்பருப்பு - ரூ.6,000, பொரி கடலை (55 கிலோ) - ரூ.4,000, லைன் மல்லி (40 கிலோ) - ரூ.3,200, நாடு மல்லி (40 கிலோ) - ரூ.3,500,  நிலக்கடலைப்பருப்பு (80 கிலோ) மூட்டை - ரூ.5,600, கடலை எண்ணெய் டின் (15 கிலோ) - ரூ.2,200, பாமாயில் டின் - ரூ.975, கடலைப் பிண்ணாக்கு (100 கிலோ) - ரூ.4,600, குண்டூர் ஏசி வத்தல் குவிண்டால் ரூ.9,500 முதல் ரூ.10,500 வரை விற்பனையானது.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி