பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்கல்

சிவகங்கை, ஜூன் 19: சிவகங்கை அருகே பாகனேரி, ஒ.இஆர்.எம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களால் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேல்நிலைப் பிரிவில் கணினி பிரிவு இருந்தும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் முன்னாள் மாணவர் வேலாயுதம் ஆறு கம்ப்யூட்டர்கள், ஒரு கலர் பிரிண்டர் மற்றும் சோலையப்பன் ஒரு கம்ப்யூட்டர் பள்ளிக்கு அளித்தனர். மேலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் ரூம் அரசு சார்பில் தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழாவிற்கு தேவகோட்டை மாவட்டக்கல்வி அலுலவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரிட்டோ வரவேற்றார். கம்ப்யூட்டர் வகுப்பறையை வேலாயுதம் திறந்து வைத்தார். ஆசிரியை பிரமிளா நன்றி கூறினார். ஆசிரியர் செல்லக்குமார் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags : school ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை பள்ளி வேன் டிரைவர் போக்சோவில் கைது