×

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு கூட்டம்

ராமநாதபுரம், ஜூன் 19: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு ராமநாதபுரம் கலெக்டர் அலுவகத்தில் நடைபெற உள்ளது. வருகின்ற 21ம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு குழந்தைகள் உரிமைமீறல், பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்திய அளவில் தமிழகம் உள்பட 8 மாநிலங்களை தேர்வு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுகல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கி ராமநாதபுரம் மாவட்டத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட உள்ளது.

வருகின்ற 21.06.2019 காலை 9 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. 10 மாவட்ட சிறப்பு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்களும் அமர்வில் கலந்துகொள்ள உள்ளனர்.இந்த அமர்வில் பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தை, உடல் ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீட்டுத் தொகை பெறுவது போன்ற குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகளை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோர் நேரடியாக அமர்வில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை