×

மாணவர்களுக்கு உடல் கண் பரிசோதனை முகாம்

பரமக்குடி, ஜூன் 19: பரமக்குடி புதுநகர் பகுதியில் இயங்கி வரும் டாக்டர் அப்துல்கலாம் மெட்ரிக் பள்ளியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான உடல் மற்றும் கண் பரசோதனை முகாம் நேற்று வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. இந்த முகாமினை பள்ளியின் தலைவர் தீன் முசாபர் அலி தலைமையேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக பள்ளியின் முதல்வர் சரண்யா வரவேற்றார். இந்த முகாமில் பள்ளியின் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் என 600 பேர் கலந்து கொண்டு உடல் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுதா நன்றி கூறினார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை