×

நீட் எங்களுக்கு தேவையில்லை மாவட்டம் பிறந்த நாளையொட்டிகக்கன் சிலைக்கு மரியாதை

மதுரை, ஜூன் 19: முன்னாள் அமைச்சர் கக்கனின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரையில் அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தியாகி சுந்தரமகாலிங்கம் தலைமையில் சர்க்கிள் கமிட்டி தலைவர்கள் முருகன், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சமூக அமைப்பினரும், ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலூர் தும்பைப்பட்டியில் உள்ள கக்கன் மணி மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் கலெக்டர் சாந்தகுமார்(பொ), அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ., மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் ஆர்டிஓ, மேலூர் தாசில்தார் உட்பட பலரும் கக்கனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags : district ,birthday ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...