ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் முகாம் 21ல் நடக்கிறது

திண்டுக்கல், ஜூன் 19: திண்டுக்கல் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் சார்பில் திண்டுக்கல் பிவிகே திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.  இதில் தொழில் துவங்குவதற்கு மத்திய, மாநில அரசுகளின் கடன் உதவி, மானியம், வங்கி கடன் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கப்படுகிறது. அதேபோல் தொழிலில் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்று பேசுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சிறுதொழில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.

× RELATED அனுமதியின்றி மது விற்ற 3 பேர் கைது