தலைவர் படம் அவமதிப்பை கண்டித்து மறியல் செம்பட்டி அருகே பரபரப்பு

செம்பட்டி, ஜூன் 19: செம்பட்டி அருகே சமுதாய தலைவர் படம் அவமதிப்பை கண்டித்து கிராமமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செம்பட்டி அருகேயுள்ளது ஒட்டுபட்டி கிராமம். இங்கு சுமார் 500 வீடுகள் உள்ளன. இவ்வூரின் நுழைவுவாயிலில் ஒரு சமுதாய தலைவர்களிடம் படம், பெயர் பொறித்த பலகை வைக்கப்பட்டுள்ளது. இரவில் மர்மநபர்கள் சிலர் இந்த பலகையை சேதப்படுத்தி சென்று விட்டனர். இதை காலையில் கண்டு ஆத்திரமடைந்த கிராமமக்கள் நிலக்கோட்டை-செம்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமார், செம்பட்டி எஸ்எஸ்ஐ சின்னப்பன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertising
Advertising

Related Stories: