சங்க கூட்டம்

நத்தம், ஜூன் 19: நத்தத்தில் மருத்துவ முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.  சங்க தலைவர் மதுரை வீரன் தலைமை வகிக்க, செயலாளர் அழகர்பாலன், பொருளாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டோம், நிலத்தடி நீரை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மரம் வளர்த்து மழை வளம் பெறுவதை பொதுமக்களிடம் எடுத்து கூறும் வகைகளில் கடைகளில் பதாகைகளை வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: