பைக் ஓட்டக்கேட்ட நண்பனை பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் கைது

இடைப்பாடி, ஜூன் 19: இடைப்பாடியில் உள்ள கடைவீதி பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சீனிவாசன்(40) டிரைவர். இவரும் இடைப்பாடி மேட்டுத்தெரு தனபால் மகன் கார்த்தி(35), இருவரும் நண்பர்கள். இந்நிலையில் இருவரும் நேற்று மதியம் ஏரி ரோடு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளனர். அப்போது சீனிவாசன் புதிதாக வாங்கியுள்ள பைக்கை ஓட்டிப்பார்க்க காரத்தி கோட்டுள்ளார். சீனிவாசன் தரமறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை சீனிவாசன், கார்த்தியின் வீட்டிற்கு சென்றுள்ளார். எதற்கான பைக்கை ஓட்ட கேட்டாய் எனக்கூறி மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சீனிவாசன் கையில் வைத்திருந்த பிளேடால், கார்த்தியின் கழுத்தை அறுத்துள்ளார். காயமடைந்த கார்த்தி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கார்த்தியை மீட்டு இடைப்பாடி அரசு மருத்தவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து இடைப்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து சீனிவாசனை கைது

செய்தனர்.
Advertising
Advertising

Related Stories: