நிறுத்தப்பட்ட பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம், ஜூன் 19: குமாரபாளையத்திலிருந்து நாமக்கல், சென்னை, பழனி, ஓமலூர் உள்ளிட்ட வழித்தடங்களில் 5 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பஸ்கள் இயக்காமல் விட்டுள்ளனர். இதனால் இந்த பஸ்களில் சென்று வந்த வியாபாரிகள், பயணிகள் தனியார் பஸ்களில் சென்று வருகின்றனர். இதனால் சரியான நேரத்திற்கு செல்ல மற்ற பஸ்கள் வரும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்கியதால் படிப்படியாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ்கள் லாபத்தில் இயங்கி வரும் போது அரசு பேருந்துகள் மட்டும் நஷ்டத்தில், முடக்கப்படுவது நிர்வாக திறமை இல்லாத போக்குவரத்து நிர்வாகிகளால் தான் என்ற பொதுவான குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது. எனவே குமாரபாளையத்திலிருந்து சென்று வந்து நிறுத்தப்பட்டுள்ள 5 பஸ்களை மீண்டும் இயக்க போக்குவரத்து மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.


Tags :
× RELATED பல வருட கோரிக்கைக்கு விடிவுகாலம்: கழிப்பட்டூர் கிராம குளம் சீரமைப்பு