மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜூன் 19: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் செவ்வாய்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருவது வழக்கம்.  மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மாடுகளை வாங்க விற்க வியாபாரிகள் இச்சந்தைக்கு வருவதுண்டு. இந்நிலையில், நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் கர்நாடகாவிலிருந்து தொடர்ந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிளில் இருந்து குறைந்த அளவிலான மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதனால் மாடுகள் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் ₹23 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்த வாரம் ₹24 ஆயிரத்திற்கும், 42 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு ₹43 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் ₹10 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் 11 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

Tags :
× RELATED விலை தொடர்ந்து அதிகரிப்பால் வெங்காயம் விலை கிலோ 100ஐ நெருங்குகிறது