தொழில் துறை திட்டங்கள் குறித்து மாஜி படைவீரர்களுக்கு சிறப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 19: தொழில் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கிறது.  இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சுயதொழில் வேலைவாய்ப்பு சம்மந்தமாக முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கூடிய சிறப்பு கூட்டம் வரும் 24ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடக்கிறது. இதில் சுயதொழில் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் உதவி இயக்குநர் பிரேமா தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,soldiers ,
× RELATED தீவிரவாதிகள் தாக்குதல் 53 ராணுவ வீரர்கள் பலி