அஞ்செட்டி அருகே சட்ட உதவி முகாம்

தேன்கனிக்கோட்டை, ஜூன் 19: அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் கிராமத்தில் சட்ட உதவி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேன்கனிக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், தேன்கனிக்கோட்டை உரிமையயில் மற்றும் குற்றவியல் நீதிதுறை நடுவருமான செந்தில்பாபு தலைமை வகித்து, சட்ட உதவி மற்றும் சமரசம் செய்வது குறித்து பேசினார். தாசில்தார் முனிசாமி, தனி தாசில்தார் செந்தில்குமரன், காவல் ஆய்வாளர் ரஜினி, தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், வழக்கறிஞர் சங்க தலைவர் ஞனசேகரன், வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், வேதபிரகாஷ், கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். இலவச சட்ட உதவி மற்றும் இளம்வயது திருமணம் தடுப்பு, பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்கள் உள்பட இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி கூறினர். தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் வரவேற்றோர். ஏற்பாடுகளை தன்னார்வலர் பெருமாள், ஊராட்சி செயலர் மாரப்பா மற்றும் சரவணன் ஆகியோர் செய்திருந்தன

Tags : camp ,Anjetti ,
× RELATED ஹைதியில் முகாமிட்டு அந்நாட்டு...