22ல் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவன முப்பெரும் விழா

திருச்சி, ஜூன் 19: இனாம்குளத்தூர் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் சாகுல் அமீது ஜமாலி திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இனாம் குளத்தூரில் இயங்கி வரும் ஆயிஷா அறக்கட்டளை பல்வேறு கல்வி மற்றும் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் தொடக்க விழா, கவிக்கோ அப்துல் ரகுமான் நூலகம் திறப்பு விழா, வரலாற்றில் வாழ்பவர்கள் மொழி பெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் 22ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.தவத்திர பால பிரஜாபதி அடிகளார் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அப்துல் ரகுமான் நூலகத்தை திறந்து வைக்கிறார். இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கிம் வரலாற்றில் வாழ்பவர்கள் என்ற நூலை வெளியிடுகிறார்.

அப்துல்சமது, அப்துல்காதர் ஆகியோரது தலைமையில் கருத்தரங்குகள் நடக்கின்றன. புதுவை சபாநாயகர் சிவக்கொழுந்து, இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நசீர்அகமது, எம்பிக்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, நவாஸ்கனி, திருமாவளவன், எம்எல்ஏ கே.என்நேரு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். வாழ்த்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, திக தலைவர் கி.வீரமணி, தமீம் அன்சாரி, பழ.கருப்பையா, எம்பி திருச்சி சிவா, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர் என்றார்.


× RELATED 22-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்