×

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1.77 கோடியில் சிறுவர் போக்குவரத்து பூங்கா

திருச்சி, ஜூன் 19: திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.1.77 கோடியில் புதிதாக மேம்படுத்தப்பட்ட சிறுவர்கள் போக்குவரத்துப் பூங்கா வரும் 21ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது.திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா ரூ.1 கோடியே 77 லட்சம் செலவில் 5079 ச.மீ பரப்பளவில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி அனைவருக்கும் கற்றுத்தரப்படும். இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து விதிகள் பற்றி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் சாலை போக்குவரத்து விதிகளை பள்ளி குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சாலை போக்குவரத்து பூங்கா ஏற்கனவே கோவையில் உள்ளது. தற்போது திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட போக்குவரத்து பூங்கா மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமான பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா திறப்பு விழா வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. பணிகள் நிறைவடைந்த போக்குவரத்து பூங்காவை திருச்சி கலெக்டர் சிவராசு நேற்று ஆய்வு செய்தார். மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், டிசிக்கள் நிஷா, மயில்வாகணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Tags : office ,Child Traffic Gardens ,Tiruchi Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்