×

21ம் தேதி திறப்பு 1,657 பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கல் 1 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

திருச்சி, ஜூன் 20: திருச்சி மாவட்டத்தில் ஏறத்தாழ 1 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.திருச்சி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலனுக்காக அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1,304 அரசுப் பள்ளிகளும், 353 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 14 வகையான இலவச கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2018-19ம் கல்வியாண்டிற்கு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 9,13,201 இலவச பாடப்புத்தகங்களும், 1 முதல் 10ம் வகுப்பு வரை 12,34,782 இலவச நோட்டு புத்தகங்களும், 1 முதல் 12ம் வகுப்பு வரை 99,462 இலவச பஸ் பயண அட்டைகளும், 1 முதல் 8ம் வகுப்பு வரை 1,22,464 இலவச சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. 1 முதல் 2ம் வகுப்பு வரை 368 வண்ணக் கிரையான்களும், 3 முதல் 5ம் வகுப்பு வரை 673 பென்சில்கள், 1 முதல் 10ம் வகுப்பு வரை 1,22,176 காலணிகள், 1 முதல் 12ம் வகுப்பு வரை 1,77,030 புத்தகப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 3,10,984 எண்ணிக்கையில் இலவச பாடப்புத்தகங்கள் பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.



Tags : Opening ,Institutions ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா