திருச்சி கலெக்டர் தகவல் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

தா.பேட்டை, ஜூன் 19: தா.பேட்டையில் ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சித்த மருத்துவர் வரதராஜன் தலைமை வகித்தார். தலைவர் பழனிச்சாமி, சித்த மருத்துவர் கோசிபா, நிர்வாகிகள் விவேகானந்தன், இக்பால் முஹமது ஆகியோர் பேசினர். அப்போது மேல்நிலைப்பள்ளிகளில் சித்த மருத்துவத்தை பாடமாக மாணவ, மாணவிகளுக்கு சேர்க்க வேண்டும். பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். அங்கீகார சான்றும், அடையாள அட்டையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


× RELATED கூடங்குளம் அணுக்கழிவு மையம்...