மணப்பாறை கிராமிய மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

மணப்பாறை, ஜூன் 19: மணப்பாறையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த கிராமிய மின்வாரிய அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக மணப்பாறை குளித்தலை சாலையில் உள்ள கலிங்கப்பட்டி துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும் என்றும் எனவே, கிராமிய மின்வாரியத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் புதிய மின் இணைப்புகள் மற்றும் அனைத்து மின் தேவைகள் சம்பந்தமான பணிகளுக்கு புதிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: