×

சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் திணறல் சேதமடைந்ததை அகற்றி விட்டு கர்ணாவூரில் புதிய அங்காடி கட்டிடம் கட்டித்தர வேண்டும்

மன்னார்குடி, ஜூன் 19: மன்னார்குடி ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சியில் சேதமடைந்துள்ள அங்காடி கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டி தர வலியுறுத்தி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் கர்ணாவூர் ஊராட்சிக்குட்பட்ட தருசுவேலி, சோத்திரியம், ஆலாச்சேரி, வேட்டைதிடல் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக அங்காடி கட்டிடம் கர்ணாவூர் கிராமத் தில் உள்ளது.இந்த கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகிவிட்டதால் போதிய பரா மரிப்பின்றி பழுதடைந்து கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் அங்காடி கட்டிடத்தில் மழைநீர் ஒழுகி பொது மக்களுக்கு விநியோகம் செய்யப் படுவ தற்காக சேமிக்கப்படும் உணவு பொருட்கள் வீணாகின்றன . இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளிடம் பல முறை நேரில் சென்றும் மனுகொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.இதனால் கடந்த ஆண்டு ஊர் கிராம பொதுமக்களே சேர்ந்து ரூ.10 ஆயிரம் செலவில் அங்காடி கட்டிடத்தை தற்காலிகமாக பழுது பார்த்தனர். இருப்பினும் இந்த கட்டிடம் மீண்டும் பழுதாகி தற்போது இடிந்து விழும் நிலையில் உள் ளது.இந்நிலையில் மன்னார்குடி வட்ட வழங்கல் அலுவலர் கர்னாவூர் கிராமத் திற்கு நேரில் சென்று அங்கு சேதமடைந்த நிலையில் உள்ள அங்காடி கட்டி டத்தை பார்வையிட்டு அங்காடியை வேறு கிராமத்திற்கு மாற்ற போவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊர் பொது மக்கள் அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் ஒன்றிய செயலாளர் பாப்பையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன், கிளை செயலாளர் மருதையன் ஆகியோர் தலைமையில் மன்னார்குடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கலைச்செல்வனிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுவில், கர்ணாவூரில் சேதமடைந்த நிலையில் உள்ள அங்காடி கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக அங்காடி கட்டிடத்தை கட்டி தர வேண்டும், அங்காடி கட்டி டத்தை வேறு ஊருக்கு மாற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.





Tags : store building ,
× RELATED அளக்குடி காவல்மானியம் கிராமத்தில் 2...