வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மக்கள் மனு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கால்நடைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, ஜூன் 19: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கால்நடைகள்பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என போராட்ட எதிர்ப்பு ஆலோசனைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவிவசாயிகளும் சமூகஆர்வலர்களும் பொதுமக்களும் தங்களது எதிர்ப்பை காட்டும் விதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதியில் அமல்படுத்த அனுமதிக்கமாட்டோம் எனஊராட்சி தோறும் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டும் வருகிறது.இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து கூட்டங்களை நடத்திஆலோசனை செய்து வருகின்றனர்.இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திருவாரூர் விவசாயசங்கமாவட்ட துணைதலைவர் ஜோசப், மற்றும் விவசாயசங்கநிர்வாகிகள்பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.பின்னர் கொத்தமங்கலம் ஊராட்சியில் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.அதன்பின்னர் எதிர்வரும் 22ம் தேதி (புதன்கிழமை) அன்று கொத்தமங்கலத்தில் மனிதஉயிர்களோடு கால்நடைகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்க போகும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முழுவதும் கால்நடைகள் பங்கேற்கும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

× RELATED பிரதமரிடம் திமுக மனு