தீவன பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்ப பயிற்சி

நீடாமங்கலம்,ஜூன்19: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் தீவனப்பயிர் சாகுபடியில் நவீன தொழில் நுட்ப பயிற்சி நிக்ரா திட்ட கிராமமான ராயபுரத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்ரமணியன் தலைமையில் நடந்தது.அப்போது அவர் பேசுகையில் கால்நடைகளை பராமரிக்கும் போது தீவன செலவு குறைவாக இருந்தால் லாபம் அதிகரிக்கும். அந்த வகையில் தீவன சோளம் கோ.எப்.எஸ்29 மற்றும் 31,கம்புநேபியர் கோ4,கோ5, சூப்பர் நேப்பியர் ,தீவன தட்டைப்பயிர்கள கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் அதிக வருமானத்தை பெறலாம் என்றார். பயிற்சியில் உழவியல்துறை விஞ்ஞானி ராஜேஷ்குமார்,பயிற்சியாளர் விஜிலா கலந்து கொண்டனர்.Tags :
× RELATED விவசாயிகளுக்கு வெண்பட்டு வளர்ப்பில் நவீன தொழில்நுட்ப பயிற்சி