முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் குடிநீர் தடையில்லாமல் வழங்க வேண்டும் தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

முத்துப்பேட்டை,ஜூன்19: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை1 ஆலோசனை கூட்டம் நூர்பள்ளிவாசலில் மாநில செயலாளர் முஜீபுர்ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் முகம்மது மிஸ்கீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முத்துப்பேட்டை புதுத்தெரு, கல்கேனிதெரு, செக்கடித்தெரு பகுதிகளில் குறைந்த மின்அழுத்தம் அடிக்கடி ஏற்படுகிறது இரவு நேரங்களில் மின்தடையும் ஏற்படுகிறது இதனால் பெதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனை உடனே சரிசெய்யவேண்டியும் முத்துப்பேட்டை பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டியும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்புவது, முத்துப்பேட்டை பேரூராட்சி கல்கேணிகுளம் கரையோரம் உள்ள சாலையை சீர்செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் தார்சாலையாக அமைத்து தரும்படியும் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தடையில்லாமல் வழங்க வேண்டி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் புகார் அளித்து வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.Tags : Tawheed Jamaat ,area ,Murattupattu Panchayat ,
× RELATED நாசரேத், குளத்தூரில் நிலவேம்பு குடிநீர் வழங்கல்