×

அரசு மானிய திட்டத்தில் நுண்ணீர் பாசன முறை

திருவாரூர், ஜூன் 19: திருவாரூர் மாவட்டத்தில் அரசின் மானிய திட்டத்தில் நுண்ணீர் பாசன முறையினை மேற்கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,நுண்ணீர்ப்பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் குழாய்கிணறு மற்றும் துளைக்கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு ஆயில் இன்ஜின் மற்றும் மின்மோட்டார் வசதி ஏற்படுத்துதல், பாசன நீரினை வீணக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்களை நிறுவுதல் மற்றும் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்காகவும் கூடுதல் மானியம் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி இந்த திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் கீழ்கண்டவாறு மான்ய திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.அதன்படி நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள குறுவட்டங்களில் குழாய்க்கிணறு மற்றும் -துளைக்கிணறுகளை- திருவாரூர் , மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டங்களில் மட்டும் அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கபடும்.இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் டீசல் பம்பு செட் மற்றும் மின்மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீதத் தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் மான்யம் வழங்கப்படும். மேலும் வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீதத் தொகையாக எக்டருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு ஒரு பயனாளிக்கு, அதற்காகும் செலவில் 50 சதவீத மானியமாக ஒரு கன மீட்டருக்கு ரூ.350- வீதம் அதிகபட்சமாக ரூ 40 ஆயிரம் வழங்கப்படும். எனவே இந்த மானிய உதவித் திட்டங்களை பெறுவதற்கு திருவாரூர் வருவாய்கோட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, பவித்திரமாணிக்கம், திருவாரூர் என்ற முகவரியிலும், மன்னார்குடி வருவாய்கோட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, அந்தோனியார்கோவில் தெரு, மன்னார்குடி என்ற முகவரியிலும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் இவ்வாறு விண்ணப்பித்து முன்பதிவு செய்த விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி செயற்பொறியாளரிடம் தக்க பணி ஆணையினை பெற்று கொண்டு பின்னர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இப்பணிகளை முடித்த பின்னர் இதற்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் விண்ணப்பிக்க அழைப்புதமிழக அரசு குரல் கொடுக்குமா?டெல்டா பாசன விவசாயிகள் எதிர்பார்ப்புகடைமடை பகுதியில்சம்பா சாகுபடி கேள்விக்குறிடெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியில் பல ஆண்டுகளாக ஒருபோக சம்பா சாகுபடி மட்டுமே நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போதுமான மழை இல்லாமலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராமலும் வழக்கமாக கடைமடை பகுதியில் பல ஆண்டுகளாக நடந்து வந்த சம்பா சாகுபடி கடந்த 4 ஆண்டுகளாக நடக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் சாகுபடி நிலங்கள் தரிசாக கிடக்கிறது.நெல் தவிர்த்து மாற்று பயிர் செய்வதற்கு 90 சதவீதம் நிலங்கள் மண்வளம் உகந்ததாக இல்லை. கடந்த 4 ஆண்டுக்கு மேலாக கடைமடையில் மழை வஞ்சித்து விட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. கடந்தாண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பி போதுமான தண்ணீர் இருந்தும் கல்லணை கால்வாய் கிளை வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் எடுக்க முடியா மல் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க வில்லை. இந்தாண்டாவது கரைகள் பலப்படுத்தபடுமா என்று விவசாயிகள் எதிர் பார்த்துள்ளனர்.இந்தாண்டு மேட்டூர் அணை இதுவரை நிரம்பவில்லை. இதனால் ஜூன் 12ல் திறக்க வேண்டிய மேட்டூர் அணை திறக்கவில்லை. இதனால் விளை நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்ந்து திரியும் அவலம் கண்ணெதிரே தெரிகிறது.

எனவே இந்தாண் டாவது மேட்டூர் அணையிலிருந்து போதுமான தண்ணீர் கிடை த்து போதுமான மழை பெய்து ஒருபோகம் சம்பா சாகுபடி நடைபெறுமா என்று கடைமடை விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இது குறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூறுகையில்,டெல்டா பாசன பகுதிகளில் பாசனம் தரக்கூடிய பெரிய ஏரிகள் அனைத்தும் போதுமான தண்ணீர் இல்லாத நிலையிலேயே உள்ளது காரணம். கடைமடை பகுதியில் இதுவரை போதுமான மழை கிடையாது. அதேநேரம் கோடை வெயிலின் தாக்கத்தைவிட அதிகமாக தற்போது சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. கடைமடையில் மழைக்கான அறிகுறியே கிடையாது. பெரிய ஏரிகளில் தண்ணீர் இருந்தால் தான் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். தற்போது நெல் சாகுபடி நிலங்களில் இதுவரை ஆடு, மாடுகள் மேய்ந்து வரும் சூழ்நிலையில் உள்ளது. எனவே இந்தாண்டாவது சம்பா சாகுபடி நடைபெறுமா என்று   கடை மடை விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றனர்.

இது குறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், காவிரி நீரை நம்பி காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர்கள் சூல் பருவம் எனும் பால் பருவத்தில் இருப்பதால் தண்ணீர் தேவைப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதாலும், காவிரி தண்ணீர் வராததாலும் இந்தாண்டு குறுவை சாகு படி தப்பிக்குமா என்ற நிலை உருவாகி வருகிறது.இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக கடந்த மே 28ம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தி–்ல் கர்நாடகா அரசை 9 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. மேலாண்மை வாரிய முடிவை ஆணையமோ, அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ கண்காணிக்கவில்லை. மத்திய அரசு, தமிழக விவசாயிகளை மதிக்கவில்லை. ஆனால் கர்நாடக அரசு, ஆணையத்தின் முடிவை அலட்சியப்படுத்தும் விதமாக, மேக தாட்டில் அணை கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழக அரசுக்கு மக்கள், விவசாயிகள் மீது அக்கறை இல்லை. காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாதது குறித்து தமிழக அரசு கூட்டம் கூட்டாதது வேதனையாக உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...