திறக்கப்படாத மேட்டூர் அணை திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஜமாபந்தி

திருத்துறைப்பூண்டி ஜுன் 19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 77 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த 6ம்தேதிஜமாபந்தி தொடங்கியது.வருவாய் தீர்ப்பாய அலுவலர் மாவட்டவழங்கல் அலுவலருமான தெய்வநாயகி தலைமை வகித்தார், தாசில்தார் ராஜன்பாபு முன்னிலை வகித்தார்.இதில் மண்டல துணை தாசில்தார் வெங்கட்ராமன், வட்டவழங்கல் அலுவலர் ராஜாமணி, தனிதாசில்தார் ஞானசுந்தரி, துணை தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முகாமில் 77 வருவாய் கிராமங்களில் இருந்து 1385 மனுக்கள்வரப்பெற்றது. இதில் பட்டா 385, ஒஏபி 40, குடும்ப அட்டை 40, சிட்டா கேட்டு 285 உள்ளிட்ட 680 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பட்டா, சிட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள்பரிசீலனையில் உள்ளது என்றுதாசில்தார் ராஜன்பாபு தெரிவித்தார்.குறுவை சாகுபடிக்காக கடந்த மே 28ம் தேதி காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தி–்ல் கர்நாடகா அரசை 9 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டுமென உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.மத்திய அரசு, தமிழக விவசாயிகளை மதிக்கவில்லை. ஆனால் கர்நாடக அரசு, ஆணையத்தின் முடிவை அலட்சியப்படுத்தும் விதமாக, மேக தாட்டில் அணை கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

× RELATED மேட்டூர் அணை திறக்கப்படாததை...