ஒரு கடைக்கு சீல் வைப்பு சாந்திவனம் சுடுகாட்டில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 19: தஞ்சை சாந்திவனம் சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.தஞ்சை சுந்தரம் நகர் விரிவாக்க பகுதியில் சாந்திவனம் என்ற சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் தற்போது மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரிப்பதற்கான மையம் அமைக்க கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.இதையடுத்து அப்பகுதியின் நகர்நல சங்கங்களின் நிர்வாகிகள், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன் தலைமையில் நேற்று சுடுகாட்டில் ஒன்றுகூடி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்ககூடாது, சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும், வேறு எந்த பணியும் அங்கு கொண்டு வரக்கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து இறைவன் கூறியதாவது: இந்த பகுதியில் யாராவது இறந்தால் அவர்களது உடலை 15 கி.மீட்டர் தூரமுள்ள ராஜகோரிக்கு கொண்டு செல்ல சிரமமாக இருப்பதாக கூறி 1971ம் ஆண்டு நீலகிரி, மேலவெளி ஊராட்சி பகுதிகளுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி ஒரு ஏக்கர் நிலம் இந்த பகுதியில் வாங்கப்பட்டது. 1986ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது இந்த பகுதிகளில் உள்ள விரிவாக்க பகுதிகள் அனைத்தும் நகராட்சியோடு இணைக்கப்பட்டது. இந்த பகுதியில் 36 முதல் 41 வார்டுகளில் அடங்கிய 80 குடியிருப்பு நலச்சங்கங்கள் ஒன்றிணைந்து சாந்திவனம் என்ற இந்த சுடுகாட்டை உருவாக்கியுள்ளோம். இதில் இந்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக உடல் தகனம், அடக்கம் செய்யும் இடங்கள் உள்ளது. சுடுகாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை தரம் பிரிக்க கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. சுடுகாட்டில் அதற்கான பணிகளை மட்டுமே செய்ய வேண்டும், குப்பைகளை வேறு எந்த பகுதியில் வேண்டுமானாலும் தரம் பிரித்து கொள்ளலாம், ஆனால் சுடுகாடை வேறு எங்கும் அமைக்க முடியாது. இதை மாநகரட்சி நிர்வாகம் கருத்தில் கொண்டு சுடுகாட்டில் மேற்கொள்ளும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

Related Stories: