ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

தஞ்சை, ஜூன் 19: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே காருகுடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் நவீன்ராஜா (23). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் தஞ்சை அருகே அம்மாப்பேட்டை முனியூரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் நவீன்ராஜா தந்தையான சுப்பிரமணியன் கடந்த 2 மாதம் முன்பு இறந்து போனதால் அவரது தாய் விஜயா, மகனிடம் குடும்ப பொறுப்பை ஒப்படைத்தார். தந்தை இல்லாத நிலையில் காதல் செய்வதை விட்டுவிட்டு ஒழுங்காக வேலைக்கு சென்று சம்பாதிக்க முயற்சி செய் என மகனிடம் கூறி வந்தார். இதனால் விரக்தியடைந்த நவீன்ராஜா, கடந்த 2 நாட்களுக்கு முன் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி பகுதியில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை ரயில்வே போலீசார், நவீன்ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

Advertising
Advertising

Related Stories: