குண்டும் குழியுமாக மாறிய மஹாதேவபுரம் தார்ச்சாலை வாகனஓட்டிகள் அவதி

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 19: குண்டும், குழியுமாக மாறிய கல்லணை அருகே மஹாதேவபுரம் செல்லும் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அகரப்பேட்டை வழியாக கல்லணை செல்லும் பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது மஹாதேவபுரம் தார்ச்சாலை. மெயின் ரோட்டில் கூனாங்கரை வரை சென்று கூடுதலாக 2 கிலோ மீட்டர் தூரத்தில் மஹாதேவபுரத்தை அடைய வேண்டும். இதனை தவிர்க்க சைக்கிளில் செல்வோர், பைக்கில் செல்வோருக்கு இச்சாலை பயனுள்ளதாக உள்ளது. இச்சாலை வழியாக பள்ளி மாணவர்கள், விவசாயிகள் பலர் தினம்தோறும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்த சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது முறையாக பணிகள் மேற்கொள்ளாததால் ஒரு சில ஆண்டுகளிலேயே தார் பெயர்ந்தும் சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.இதுகுறித்து பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் அண்ணாத்துரை கூறுகையில், இச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன் சீர்படுத்தியபோது பெயரளவில் தான் செய்தனர். அதனால் சில மாதங்களிலேயே சாலை சேதமடைந்து விட்டது. இச்சாலையால் குறிப்பாக சைக்கிளில் செல்லும் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயனடைவர். இதை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: