தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

கும்பகோணம், ஜூன் 19: கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.    அப்போது நிலைய இயக்குனர் அம்பேத்கர் வரவேற்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும், உலகளாவிய வேளாண் பல்கழைக்கழகமும் இணைந்து செயல்படும் ஆராய்ச்சி பணிகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் நிலையத்தின் முக்கிய குறிக்கோள்களை பூர்த்தி செய்யும் பல்வேறு துறை விஞ்ஞானிகள் மூலம் செயல்பட்டு கொண்டிருக்கும் ஆராய்ச்சி திட்டங்களை விளக்கினார்.பின்னர் நிலவி வரும் நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்ட நேரடி நெல் விதைப்பு செயல்விளக்க திடலை உழவியல் துறை இணை பேராசிரியர் ராஜூ, நேரடி நெல் விதைப்பு குறித்த உலகளாவிய தொழில்நுட்பங்களை கலெக்டர் அண்ணாதுரை விளக்கினார். மேலும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை செயல்விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.

Advertising
Advertising

பிறகு நிலையத்தில் அமைக்கப்பட்ட குறுகியகால நெல் ரகங்களின் அனுசரணை ஆராய்ச்சி திடலை பயிர் மரபியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ் விளக்கி நெல் ரகங்களின் தூர்பிடிப்பு தன்மை, பருவத்துக்கேற்ற பயிர் இடைவெளி பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் ஆய்வுக்கூடத்தில் உள்ள நெல் தரத்தை ஆய்வு செய்ய பயன்படும் உபகரணங்களின் செயல்பாடுகளை கண்டறிந்தார். இதைதொடர்ந்து நெல்லின் மரபியல் பண்புகளை மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்துக்காக அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்தை பார்வை செய்ததுடன் அங்கு பணியாற்றி கொண்டிருந்த முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்பு மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

Related Stories: