மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கும்பகோணம், ஜூன் 19: ஆடுதுறையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 1994ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டில் கல்வி பயின்ற மாணவர்களின் 25ம் ஆண்டு நட்புகளின் சங்கமம் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது. நிறுவன முதல்வர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர்கள் கலியமூர்த்தி, சூர்யமூர்த்தி, சந்திரசேகர், நவநீதகிருஷ்ணன், வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முருகன் வரவேற்றார். 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் நட்புகளின் சங்கமம் குடும்ப திருவிழா சந்திப்பு என்பதால் ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். முதுநிலை விரிவுரையாளர் திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார். விழா இறுதியில் அனைவரும் மரக்கன்றுகள் நட்டனர். 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஆசிரியர் ரகு நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: