டயர் தனியாக கழன்று ஓடியது அரசு நடவடிக்கை எடுக்குமா? மழைநீர் தேங்கும் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

பொன்னமராவதி, ஜூன் 19: பொன்னமராவதி அருகே மழைநீர் தேங்கும் குண்டும், குழியுமான ஆலவயல்- தூத்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடனடியாக சாலையை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயலில் இருந்து தூத்தூர்-மணப்பட்டி வழியாக வலையபட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கி விடுகிறது.

இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை என்று இந்த சாலை வழியாக சென்று வந்த அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த சாலை வழியாக ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்தூர்- மணப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெய்யப்பா வள்ளியம்மை பள்ளி செல்லும் மாணவர்கள் சைக்கிளில் சென்று வரமுடியாத நிலையில் சாலை உள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு வசதியாக போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government ,rainwater road ,
× RELATED காரைக்கால் மக்களுக்கு தீபாவளி இலவச...