மின்கம்பியில் உரசியதில்

கறம்பக்குடி, ஜூன் 19: கறம்பக்குடி அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்து சேதமானது.தஞ்சை நடார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு சொந்தமான லாரியில் வைக்கோல் போர் ஏற்றிக்கொண்டு டிரைவர் புதுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தார். நேற்று காலை கறம்பக்குடி ரகுநாதபுரம் பகுதியில் வந்தபோது வைக்கோல் போர் சாலையோரம் செல்லும் மின்கம்பியில் உரசியதில் திடீரென வைக்கோல் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட டிரைவர் உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு கீழே குதித்து உயிர் தப்பினார். பின்னர் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செழியன் உத்தரவின்பேரில் சிங்கமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.ஆனாலும் வைக்கோல் முழுவதும் எரிந்து சாம்பலானது. லாரியும் முற்றிலும் எரிந்து சேதடைந்தது. இதுகுறித்து கறம்பக்குடி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைக்கோலுடன் லாரி தீப்பிடித்து எரிந்தது


Tags :
× RELATED மின்கம்பத்தில் 3 சக்கர சைக்கிள் மோதி கூலிதொழிலாளி பலி