பயன்பாடற்று கிடக்கும் மினி குடிநீர்தொட்டி

பொன்னமராவதி, ஜூன் 19: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் வலையபட்டி தபால்நிலையம் முன்பு உள்ள குடிநீர் தொட்டி இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி பேரூராட்சி 12 வது வார்டு வலையபட்டியில் தபால் நிலையம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் தேவைகளுக்காக சிறு மின்விசை இறைப்பான் (சிறிய குடிநீர் தொட்டி) கட்டப்பட்டது. புதிதாக போர்வெல் அமைத்து அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் தொட்டியில் சிறிது நாள் மட்டுமே தண்ணீர் வந்தது.அதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக இயங்கவில்லை. இந்த பகுதி பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்த குடிநீர் தொட்டியை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED சிவகாசியில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்