வாலிபருக்கு அரிவாள் வெட்டு

அரியலூர், ஜூன் 19: அரியலூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அணிக்குறிச்சியை சேர்ந்த விவசாயி திருமுருகன் (38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகர் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் ராஜசேகர் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து கேட்க முயன்ற திருமுருகனை தகாத வார்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டி ராஜசேகர் தாக்கினார். இதில் படுகாயமடைந்த திருமுருகன், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் திருமுருகன் மனைவி ராஜலட்சுமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான ராஜசேகரை தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED புதுக்கோட்டை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு