×

கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசனை பெரம்பலூரில் உலக இசை தின விழா நுண்கலை போட்டிகள்

பெரம்பலூர்,ஜூன்18: பெர ம்பலூரில் மாவட்ட அளவி லான உலக இசை தின விழா நுண்கலைப் போட்டிகள். இன்று (18ம்தேதி) நடக்கிறது. இது குறித்து பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலை மை ஆசிரியர் ஹேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது : பெரம்பலூரில் உலக இசை தினவிழா நுண் கலைப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப் பள்ளி சார்பில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது.இதில் தமிழிசைப் போட்டி, கிராமிய பாடல் போட்டி, முதன்மைக் கருவி இசை போட்டிகளான நாதஸ்வ ரம், வீணை, வயலின், புல்லாங்குழல், கோட்டு வாத்தி யம், மாண்டலின் , சாக்ஸ போன், கிளாரி நெட் போன் றவற்றை இசைக்கலாம்.

தாள இசைப் போட்டி கருவி களான தவில், மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங் ஆகியவற்றையும் இசைக்க லாம்.தமிழில் அமைந்த பாடல்க ளை மட்டும் இசைக்க வேண்டும். போட்டியாளர்களே தங்களது இசைக்கருவிகளைக் கொண்டு வர வேண்டும். இப்போட்டிக ளில் 15 வயது முதல் 30 வய துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். போட்டிகளில் வெற்றி பெறுபவர்க ளுக்கு முதல் பரிசாக ரூ3 ஆயிரம், 2வது பரிசாக ரூ2 ஆயிரம், 3வது பரிசாக ஆயி ரம் ரூபாய் ரொக்கப் பரிசுக ளும், சான்றிதழ்களும் வழ ங்கப்படும். போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக் கும் சான்றிதழ் வழங்கப்ப டும் என அதில் தெரிவித்துள்ளார்.இன்று நடக்கிறது



Tags : World Music Day Fine Arts Competition ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்