பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார வள மையங்களுக்கு 230 லேப்டாப்

பெரம்பலூர்,ஜூன்19: பெரம்பலூர் மாவட்டத்தில் 4ஒன்றியகளில் இயங்கி வரூம் வட்டார வளமையங்களுக்கு தமிழக அரசு 230லேப்டாப்களை வழங்கியுள்ளது.தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பிளஸ்1. பிளஸ்2 மாணவ மாணவியரு க்காக இலவச லேப்டாப்களை வழங் கும் திட்டங்களைக் கடந்த 7ஆண்டுக ளாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு, அனைவருக் கும் கல்விஇயக்கத் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்ப லூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4ஒன்றியங்கள் அளவில் இயங்கிவரும் வட்டார வளமையங்க ளுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வட்டார வளமையங்களுக்கென 230 லேப் டாப்களை நேற்று தமிழக அரசு வழங்கியுள்ளது. இவை பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில்உள்ள எஸ்எஸ்ஏ அலுவலகத்திற்கு நேற்று வந்திறங்கியது.Tags : Regional Resource Centers ,Perambalur District ,
× RELATED பாரிமுனை லாட்ஜில் போலீசார் சோதனை:...