பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர், ஜூன் 19: அரியலூர் மாவட்ட பள்ளிகளில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.  அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொழில் பயிற்சி நிலையம், மருவத்தூர் நடுநிலைப்பள்ளி, இரும்புலிக்குறிச்சி மேல்நிலைப்பள்ளி, குவாகம் உயர்நிலைப்பள்ளி, தூத்தூர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு எஸ்பி னிவாசன் தலைமை வகித்து சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமுறை,, ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். முடிவில் அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

× RELATED ஒலி பெருக்கி தொல்லையால் பள்ளி மாணவர்கள் அவதி