×

ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவேடு குறித்த 3ம்கட்ட பயிற்சி வகுப்பு விடுப்பு பதிவு செய்ய புதிய ஆப் அறிமுகம்

பெரம்பலூர்,ஜூன்19: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில்
முதன் முறையாக, மாவட்டம் முழுமை க்கும் மின்ஆளுமைத்திட்டம் அமல்ப டுத்தப்பட்டது. இதனையொட்டி தமிழ கத்தில் முன்னோடியாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் எனப்படும் தொடுஉணர் வருகைப்பதி வேடு முறையும் அறிமுகப்படுத்தப்ப ட்டது. இது ஆன்லைன் குளறுபடி, பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக்கூட கையாளத் தெரியாததுபோன்ற கார ணங்களால் முழுமையாக வெற்றி பெறாமல் இருந்தபோதும், மாவட்ட அளவில் 50 பள்ளிகளில் பரிச்சார்த்த மாக நடை முறைப்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஆஃப்லைன் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையும் பரீட்சார்த்தமாக இந்த மாவட்டத்தில் தான் நடைமுறை படுத்தப்பட்டது.இதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்பட்ட சாப்ட்வேர் டிவைஸ் மூலம் பயோமெட்ரிக் வரு கைப்பதிவேடு முறை குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில் பெரம் பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கு தொடங்கப் பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, தற்போது தமிழகஅளவில் நடப்பு கல்வியாண்டில் ஜூன் 3ம்தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதன்படி ஆன்லைன்மூலம் ஆசிரிய ரின் வருகைப்பதிவை ஆதார்எண்கள் உதவியுடன் பதிவுசெய்யும்முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த பயோமெட் ரிக் வருகைப்பதிவேடு கடந்த 3ம்தேதி முதல் தமிழக அளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 83 அரசு உயர்நி லைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள், 8 ஆதிதிராவிடர் நல உயர்நிலை, மேல்நி லைப்பள்ளிகள் மற்றும் 7அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் பெரம்பலூர் மாவட்டா அளவிலுள்ள 98 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக ளைச் சேர்ந்த தலைமைஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியர்கள், அலுவ லர்கள் உள்ளிட்டோருக்கு 2கட்டங்க ளாக சிறப்புப் பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று பெரம்ப லூர் துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரண சாரணியர் பயிற்சி மையக் கட்டிடத்தில் 3ம்கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகு ப்பிற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருளரங்கன் தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி லைத்தார். மாவட்டக்கல்வி அலுவலர் கள் பெரம்பலூர் மாரிமீனாள், வேப்பூர் குழந்தைராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். பாயோமெட்ரிக் பயி ற்சிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் விஜயகுமார் கலந்துகொண்டு மை-அட்டெண்டென்ஸ் எனப்படும் புதிய ஆப் (செயலி) மூலம் விடுப்பு எடுக்க வீண்ணப்பிப்பது குறித்தும்குறித்து விளக்கிக் கூறினார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது