×

கொள்ளிட கரையில் மணல்குவாரி துவங்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் 2ம் தேதி குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

தா.பழூர், ஜூன்19 : கொள்ளிடக்கரையில் மணல்குவாரி துவங்க கோரி மாட்டு வண்டிதொழிலாளர்கள் 2ம் தேதி குடும்பத்தினருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு, சங்க ஆலோசகர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் சமீபத்தில் திருச்சியில் மணல் குவாரி திறந்ததுபோல் அரியலூர் மாவட்டம் திருமானூர், தா.பழூர் கொள்ளிடக் கரையில் மாட்டுவண்டி மணல் குவாரி துவங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூலை 2ம் தேதி மாட்டு வண்டி தொழிலாளர் சங்க தொழிலாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்வது. மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அரசுடைமை வங்கிகளில் மாடு மற்றும் வண்டிகள் வாங்க கடன் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் மாட்டு வண்டி உரிமையாளர்கள் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தற்போது மணல் தேவையால் திண்டாடி வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக சுமார் 69ஆயிரம் பேர் உள்ளனர்.அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் தலைமையில் வாரிய கூட்டம் 18.02.2013 அன்று ஒரு முறை நடத்தியதோடு சரி, அதன்பிறகு வாரிய த்தின் பதவிகாலம் 3 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

இந்த மூன்று ஆண்டுகளில் பூசாரிகளுக்கு பேரளவில் கூட நலத்திட்டங்கள் வழங்கப் பட வில்லை. கடந்த ஆண்டுகளில் நலத்திட்டத்திற்காக விண்ணப்பித்த பல பூசாரி களுக்கு நலத்திட்டம் ஏதும் கிடைக்காமல் மன மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.வாரிய கூட்டம் நடந்து ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட்டம் இதுவரை நடத் தப்பட வில்லை. தமிழக திருக்கோவில்களில் கோடிக்கணக்கான வருமானங்கள் இருந்தும் கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் வறுமை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.நல வாரியத்துக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை. பூசாரிகள் நலவாரியம் பூசாரிகளுக்கு வெறும் பெயரளவில் மட்டுமே உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுப் பதோடு ஐந்து ஆண்டுகளாக வாரியத்திற்காக ஒதுக்கப்படாத நிதியை உடனே ஒதுக்க வேண்டும்.
பூசாரிகள் நல வாரிய உறுப்பினர்களை புதுப்பிக்கும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. வாரிய அடையாள அட்டை புதுப்பிக்க மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை போதிய அக்கறை செலுத்தாத காரணத்தால் அடையாள அட்டை புதுப்பிக்க செல் லும் பூசாரிகள் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் விரட்டி அடிக்கப் படுகின்றனர்.இது வரை தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்கள் 69ஆயிரம் பேர் சேர்க்கப் பட்டு உள்ளனர். இதில் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள் சுமார் 7000 பேர் மட்டுமே என தெரிய வருகிறது. மீதம் உள்ள பூசாரிகளை புதுப்பிக்க காலதாமதப் படுத்துவது ஏன் என தெரியவில்லை.எனவே அரசு பூசாரிகள் நல வாரியம் செயல்படுகிறதா? இல்லையா என்பது பூசாரி களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.எனவே தமிழக அரசு பூசாரி கள் நலவாரியத்தை செயல்பட கூடிய வாரியமாக செயல்படுத்திட வேண்டும். விரை ந்து வாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன.

இதில் ஆண்டு வருமானம் 10ஆயிரத்திற்கு கீழ் வருவாய் உள்ள கோயில் சுமார் 24ஆயிரத்திற்கு கீழ் உள்ளன. இக்கோயில்களில் பணியாற்றும் பூசாரிகளின் நிலமை, பணி பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தமிழக கோயில் பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு கூறுகை யில், தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் பணியாற்றும் பூசாரிகள் எத்தனை பேர், அவர்களது முகவரி பட்டியல் தேவை என சென்னை ஆணையரிடமும், இந்து சமய அறநிலையத்துறையின் மாவட்ட அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட போது முகவரி பட்டியல் இவ்வலுவலகத்தில் பராமரிக்கப்படவில்லை என ஆணையரும் தெரிவிக்கின்றார். மாவட்ட அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பூசாரிகள் பணி பாது காப்பு இல்லாமல் மாத ஊதியம் இல்லாமல் அனாதைகள் போல இருக்கும் அவல நிலையத்தான் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பதில் தெரிவிக்கின்றது. எனவே தமிழக அரசு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூசாரிகளை பாதுகாத் திட வேண்டுமென இது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக் கில் 12வாரத்தில் அரசானை பிரப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், அதிகாரி களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தால் உத்திரவிடப்பட்டது. இதனை அதிகாரிகள் செயல்படுத்தியதாக தெரியவில்லை எனவே இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தர விட வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு பதிவு தபால் மூலமாக மனு அனுப் பப்பட்டுள்ளன என்றார்.இது வரை தமிழகம் முழுவதும் வாரிய உறுப்பினர்கள் 69 ஆயிரம் பேர் சேர்க்கப் பட்டு உள்ளனர். இதில் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்கள் சுமார் 7000 பேர் மட்டுமே என தெரிய வருகிறது. மீதம் உள்ள பூசாரிகளை புதுப்பிக்க காலதாமதப் படுத்துவது ஏன் என தெரியவில்லை.


Tags : Hunger shop ,coworkers ,
× RELATED குன்றத்தூர் வட்டார வளர்ச்சி...