பூட்டிக்கிடக்கும் கழிப்பறை கரூரில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 23ல் நடைபெறுகிறது

கரூர், ஜூன் 19: ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் ஜூலை 23ம்தேதி நடைபெறுகிறது.கரூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் வரும் ஜூலை 23ம் தேதி (செவ்வாய்) காலை 11 மணியளவில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மற்றும் ஓய்வூதிய இயக்குனர்களால் நடத்தப்படுகிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை (இரட்டைப்பிரதிகளில்) கரூர் மாவட்ட கலெக்டருக்கு, ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் மனு என எழுதப்பட்ட உறையில் அஞ்சல் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நேரிலோ ஜூலை 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். அல்லது 23ம் தேதி அன்று நேரடியாக மனு கொடுக்கலாம் என கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


× RELATED பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்