மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் கரூர் கலெக்டரிடம் பாமக நிர்வாகிகள் கோரிக்கை மனு

கரூர், ஜூன் 19: மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பாமகவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாமக மாநில துணைபொதுசெயலாளர் பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:மாவட்டம் முழுவதும் வறட்சியால் கடும் குடிநீர் பிரச்னை உள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மாட்டுவண்டிகளில் மணல் அள்ளுவதும் அதை தனியார் இடத்தில் கொட்டி லாரிகள் மூலம் கடத்துவதும், பிறகு தடைவிதிப்பது மீண்டும் அனுமதிப்பது என தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே உள்ளூர் தேவைக்கு வீடு கட்டுபவர்கள் நேரடியாக வந்து பணம் கட்டி வாகனத்தை வாடகைக்கு எடுத்து வந்து மணல் ஏற்றி செல்லும் வகையில் அரசு குவாரி அமைத்து வெளிப்படையாக நடத்தலாம். ஒரே இடத்தில் ஸ்டாக் வைக்க அனுமதிக்கக்கூடாது.இதன் மூலம் கடத்தலை தடுப்பதோடு அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : Managers ,Karur Collector ,
× RELATED அனுமதி பெறாத பார்களை ஆய்வு செய்ய...