குளித்தலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாய ஜமாபந்தி துவக்கம்

குளித்தலை, ஜூன் 19: கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் 1428ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வட்டாட்சியர் சுரேஷ்குமார், ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் மருதை, சித்ரா, மாரியப்பன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முதல் நாளான நேற்று நடைபெற்ற ஜமாபந்தி தோகைமலை குறுவட்டத்திற்குட்பட்ட 13 கிராமங்களுக்கு நடைபெற்று நூற்றுக்கணக்கான மனுக்கள் பெற்றப்பட்டது. இன்று(புதன்கிழமை) நங்கவரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 20ம் தேதி வியாழக்கிழமை நங்கவரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சேப்ளாப்பட்டி, நெய்தலூர் வடபாகம், தென்பாகம், தளிஞ்சி, ராச்சாண்டார்திருமலை, புழுதேரி ஆகிய கிராமங்களுக்கும், நான்காம் நாள் 21ம் தேதி வெள்ளிக்கிழமை குளித்தலை குறுவட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை, மருதூர் வடபாகம் துண்டு ஐஇ ஐஐ, தென்பாகம் துண்டு ஐஇ ஐஐஇ குமாரமங்கலம், ராஜேந்திரம் வடபாகம், தென்பாகம் ஆகிய கிராமங்களுக்கும், 25ம் தேதி செவ்வாய்க்கிழமை குளித்தலை குறுவட்டம், கருவேப்பநாயக்கன்பேட்டை, வதியம், மணத்தட்டை, கடம்பர்கோவில், வைகநல்லூர் வடபாகம், தென்பாகம், சத்தியமங்கலம், இரண்யமங்கலம், நல்லூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.ஜமாபந்தி நிறைவுநாளான ஜுன் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமையில் குடிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

Tags : office ,Bathinda Taluk ,Jamabandi ,
× RELATED பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை