தோகைமலை அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தோகைமலை, ஜூன் 19: கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-2019ம் ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் கந்தவேல் தலைமை வகித்தார். ஆசிரியர் சுந்தர் முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர்கள் கண்ணப்பன், ராஜேஸ்வரி, லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு வெள்ளி மெடல் பரிசளித்தனர். 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ரோகிணி, 2ம் மதிப்பெண் பெற்ற கவுசல்யா, 11ம் வகுப்பு பிரபாவதி, அனுசுயா, 10ம் வகுப்பு பரத்குமார், சண்முகம் ஆகியோருக்கு வெள்ளி மெடல் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.

Tags : examination ,Higher Secondary School ,
× RELATED அர்ப்பணிப்புடன் பாதுகாத்த எஸ்பிஜி.க்கு சோனியா பாராட்டு