கருங்குழி ராகவேந்திரர் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை

மதுராந்தகம், ஜூன் 19: மதுராந்தகம் அடுத்த கருங்குழியில்,  ராகவேந்திரர் கோயில் உள்ளது. இங்கு, ஆனி மாதம் பவுர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.சித்தர் யோகி ரகோத்தமர் சுவாமி ராகவேந்திரர், விநாயகர், சத்யநாராயணா, நந்தி ஆகியவற்றிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டார். முன்னதாக, ஆலய வளாகத்தில் உள்ள ஞானலிங்கம் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை  செய்தார். அதை தொடர்ந்து, லிங்கத்துக் பூஜைகள் செய்து கலசநீரை, ஊற்றி அபிஷேகம் செய்து வைத்தார். பின்னர், பக்தர்கள் லிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து, சித்தர் யோகி ரகோத்தமர் சுவாமிகளிடம் அருளாசி பெற்றனர்.இதில், ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி பாலச்சந்திரன், ஐஜி மாசானமுத்து மற்றும் சென்னை, பெங்களூர், சேலம், புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில், அன்னதானம்  வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராகவேந்திரர் அறக்கட்டளை தலைமை நிர்வாகி ஏழுமலைதாசன் செய்தார்.


Tags : Annai ,
× RELATED பாபநாசம் ஆற்றை தூய்மையாக வைக்க பரிகார பூஜை நடத்துவோருடன் நகராட்சி ஆலோசனை