ஜமாபந்தி நிறைவு நாளில் ₹2 கோடி நலத்திட்ட உதவிகள்

செய்யூர், ஜூன் 19: செய்யூர் தொகுதியில் ஜமாபந்தி முகாம் கடந்த மே மாதம் 29ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி வரை நடந்தது. இதில் செய்யூர் தொகுதி மக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட், ஆதார் கார்டு, முதியோர்,  ஊனமுற்றோர் உதவி தொகை, உழவர் காப்பீடு திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. அதில், 500க்கும் மேற்பட்ட மனுக்களில் 251 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

செய்யூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மதுராந்தகம் ஆர்டிஓ மாலதி தலைமை தாங்கினார். செய்யூர் வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திமுக எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ  ஆர்.டி.அரசு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ₹2 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.


× RELATED 28 பயனாளிகளுக்கு ரூ.3.36 லட்சம் நலத்திட்ட உதவி