இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம், ஜூன் 19: இலவச தையல் இயந்திரம் பெறும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.தமிழ்நாடு, சமூகநலத் துறையின் கீழ் 2019-20ம் நிதியாண்டுக்கு சத்தியவாணி முத்து அம்மையார்  நினைவு  இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை  அடிப்படையில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.இலவச தையல் இயந்திரம் வேண்டுவோர்  20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வருமானச் சான்று ₹72000க்குள் இருத்தல் வேண்டும். விதவை / கணவரால் கைவிடப்பட்டவராக இருந்தால், அதற்கான சான்று, ஜாதி சான்று  ஆகியவை வட்டாச்சியரிடம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 6 மாதம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, குடும்ப அட்டை நகல்,  ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய  சான்றுகளுடன்  மாவட்ட சமூக நல அலுவலகம், எண்-43, 2வது தெரு, காந்தி நகர்,  செவிலிமேடு, காஞ்சிபுரம் -631501 என்ற முகவரியில் தங்களது விண்ணப்பத்தினை  வரும் 5ம்   தேதி மாலை 5.45 க்குள்  சமர்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மாவட்ட அளவிலான பெண்கள் மைய பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு